டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஹேக்கப் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து சைபர் ஸ்பியர் எனும் சைபர் பாதுகாப்பு ஆய்வக மையத்தை கல்லூரி வளாகத்தில் தொடங்கியுள்ளது. இந்த மையத்தை டாக்டர் என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் செயலர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி, சைபர் குற்றவியல் பிரிவு இன்ஸ்பெக்டர் அருண், கல்லூரி முதல்வர் பிரபா, ஹேக்கப் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தினேஷ் பராந்தகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.