ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற ‘தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா’ மர்ச் 10 அன்று சிறப்பாக நிறைவு பெற்றது. இதனை முன்னிட்டு ‘அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா’ நிகழ்ச்சி ஆதியோகி முன்பு பக்திபூர்வமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருமேனிகள் பல்லக்கில் எழுந்தருளச் செய்யப்பட்டது. பின்னர், தேவாரப் பாடல்களுடன் கைலாய வாத்தியம் முழங்க, ஆதியோகியை சுற்றி அறுபத்து மூவர் உலா நடைபெற்றது. இறுதியாக, ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் ஆராதனை நடைபெற்றதோடு, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஆராதனை பிரசாதம் வழங்கப்பட்டது.
தென்கைலாய பக்தி பேரவையின் சார்பில் சிவயாத்திரை பாதயாத்திரையாக வெள்ளியங்கிரி மலையை சென்றடைந்தது. சென்னையிலிருந்து வந்த சிவனடியார்கள் குழு, அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருமேனிகளை தாங்கிய தேரினை பாதயாத்திரையாக கொண்டு வந்தது சிறப்பம்சமாக அமைந்தது.