நீட் தேர்வு குளறுபடிகள் காரணமாக ஏற்பட்டுள்ள துயரங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான பதவி விலக வேண்டும் என டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கு ஆதரவு தெரிவித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்கழகத்தின் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனைத்து முற்போக்கு இயக்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று, டெல்லியில் போராடுவோருக்கு தங்களின் ஆதரவையும், மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.