கோவை புத்தகத் திருவிழாவில், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ் இலக்கிய
மாணவர்களின் சிறப்பு இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில், யாக்கை மரபு அறக்கட்டளை கண்காட்சிக் கூடம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அறவாணன் தமிழ்க் கோட்டம், பாரதி புத்தகாலயம் ஆகிய அரங்குகளின் முன்பாக மாணவர்கள் நூல்கள் வாசிப்பதன் அவசியம், வாசிப்பு மனித வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள், சிறந்த நூல்களின் தனிச்சிறப்புகள் ஆகியவற்றை எடுத்துரைத்தனர்.

1. a scaled

மேலும், பல்வேறு நூல்களை அறிமுகப்படுத்தி அவற்றின் கருத்து, இலக்கியச் சிறப்பு மற்றும் சமூகப் பயன் குறித்து திறனாய்வு செய்து விளக்கினர்.

மாணவர்கள் வழங்கிய இந்த இலக்கிய நிகழ்ச்சி நெதர்லாந்தில் இயங்கி வரும் சூரியத் தமிழ் தொலைக்காட்சிக்காக சுமார் இரண்டு மணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக பதிவு செய்யப்பட்டது.

நிகழ்வில் இருபது மாணவர்கள் பங்கேற்று தங்களது வாசிப்புத் திறன், இலக்கியப் பார்வை மற்றும் பேச்சாற்றலை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியை தமிழ்த்துறை ஆசிரியர்களான ராஜலட்சுமி, சதீஷ்குமார், சேதுமாதவன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.