இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நுன்னரி லேப்ஸ் நிறுவனத்திற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்வு நடைபெற்றது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் கல்வி-தொழில்துறை இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

நுன்னரி லேப்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் நவநீத் மாலிங்கன் செயற்கை நுண்ணறிவு, ஜெனரேட்டிவ் ஏஐ, ஏஜென்டிக் ஏஐ மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு திறன்கள் குறித்து பேசினார்.

tamil 1 scaled

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப், தொழில்துறைத் திட்டங்கள், பட்டறைகள், ஹேக்கத்தான்கள், சான்றிதழ் பயிற்சிகள், ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் நடராஜன், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் ஜமீர் பாஷா கலந்து கொண்டனர்.