கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.

இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின் தடை ஏற்படும். அவ்வாறு நாளை (23.7.26) கோவை மாவட்டத்தில் உள்ள பல துணை மின் நிலையங்களில் மின்தடை ஏற்படவுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்

ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையம் : மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி), ஏழுர் பிரிவு, அரிசிபாளையம் ஒரு பகுதி, ஒத்தக்கால்மண்டபம், ஒக்கிலிபாளையம், பிரீமியர் நகர், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டு குப்பை, தேகானி மற்றும் செட்டிபாளையம்.

பீடம்பள்ளி துணை மின்நிலையம் : கலங்கல், பட்டணம், பீடம்பள்ளி, பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், நடுப்பாளையம் (ஒரு பகுதி), சின்னக்குயிலி, நாயக்கன்பாளையம், பள்ளபாளையம், பாப்பம்பட்டி பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு பகுதி).