கோவை அண்ணா சிலை ரோடு வழியே ஆர்.டி.ஓ. அலுவலகம் நோக்கி செல்ல துவங்கும் இடத்தில் சாலையின் மையப்பகுதியில் வாகனஓட்டிகள் பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இவை நிறுவப்பட்ட கான்க்ரீட் தளம் மோசமான நிலையில் உள்ளதால் அதன் மேல் நின்ற 3 முதல் 4 தடுப்புகள் சாலையில் உடைந்து கீழே விழுந்துகிடக்கின்றன. இதனால் வாகனஓட்டிகளுக்கு இடையூறும், சிரமமும் ஏற்ப்பட வாய்ப்புள்ளது.

இதை சரிசெய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதசாரிகள், வாகனஓட்டிகள் கோரிக்கை.

