கோவை, கணபதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் கல்விப் பணிகளை நினைவுகூரும் வகையில் “கல்வி வளர்ச்சி நாள்-2026” விழா  நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியர் சசி பிரபா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர் பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் கவிதாசன் மாணவர்களுக்கு கல்வியின் அவசியம், ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் வாழ்க்கைத் திறன்களின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

மேலும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு போட்டிகள் மற்றும் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 300 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், 50,000 ரொக்க பரிசுகளும்  வழங்கப்பட்டன.