தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் இன்று கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே தமிழக அரசு மருத்துவ காப்பீடு திட்டம் அரசாணை 123-ல் அறிவிக்கப்பட்ட பல்வேறு குறைபாடுகளை களைந்து சரியான திருத்தம் செய்ய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அரசாணை 123-ல் தெரிவிக்கப்பட்டுள்ள குறைகளை களைந்து திருந்தம் செய்து உத்தரவிட வேண்டும் எனவும்  மருத்துவ காப்பீடு மாதாந்திர பிரீமியம்  தொகையாக 2026 ஜூலை மாதம் முதல் .வசூலிக்கப்படும் ரூ.644ஐ ரத்து செய்து பழைய பிரிமியத் தொகையான ரூ. 497-ஐ பிடித்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மேலும் மருத்துவமனைகளில் ஓய்வூதியர்கள் அனுமதிக்கப்படும்போது காசில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், அரசு மாதம் மருத்துவப்படியாக ரூ. 1000 வழங்கவேண்டும் என்பது போன்ற பிற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
thatha2 scaled