தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மாநிலத்தில் சுமார் 84.29% வாக்குப்பதிவு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தோராயமாக 84.35 % வாக்குபதிவு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் தரப்பில் வழங்கப்பட்டுள்ள தகவலின் படி,
கோவை வடக்கு தொகுதியில் – 75.21 %, கோவை தெற்கு தொகுதியில் – 81.76%,கவுண்டம்பாளையம் தொகுதியில் – 85.49 %,
கிணத்துக்கடவு தொகுதியில் – 86.71 %, மேட்டுப்பாளையம் தொகுதியில் – 85.23 %,
பொள்ளாச்சி தொகுதியில் -87.50 %, சிங்காநல்லூர் தொகுதியில் – 80.92%,சூலூர் தொகுதியில் – 87.87%,
தொண்டாமுத்தூர் தொகுதியில் -87.19 %, வால்பாறை தொகுதியில் -84.96 % வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
அதிகபட்சமாக சூலூர் தொகுதியில் 87.87% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக கோவை வடக்கு தொகுதியில் 75.21% வாக்குப்பதிவும் நிகழ்ந்துள்ளது.
கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் இறுதியான வாக்குபதிவு விவரங்களை வெளியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
