வார இறுதி நாட்கள் (செப்டம்பர் 12, 13) மற்றும் வரும் திங்கள் விநாயகர் சதுர்த்தி ஆகியவற்றை முன்னிட்டு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – கோவை கோட்டம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காந்திபுரம் மற்றும் சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் இருந்து சேலம், மதுரை, தேனி, திருச்சி மற்றும் தொலைதூர வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து 30 சிறப்பு பேருந்துகளும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 90 சிறப்பு பேருந்துகளும் சனி, ஞாயிறு திங்கள் ஆகிய தினங்களில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் பொதுமக்களின் வசதிக்கேற்ப இயக்கப்படும்.
Previous

