அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, ஆடு, மாடு, கோழிகள் மற்றும் பன்றிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்றைய தினத்தில் கோவை மாநகராட்சி பகுதிகளில் செல்பட்டுவரும் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி தெரிவிக்கப்படுகிறது. மேலும், உக்கடம், சக்திரோடு மற்றும் போத்தனூர் ஆடு / மாடு அறுவைமனைகளும் செயல்படாது.
இந்த உத்தரவினை மீறி செயல்படும் கடைகளின் மீது மாநகராட்சி சட்ட விதிகளின் படி, அபராதம், பறிமுதல் மற்றும் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.
