பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நொய்யலாற்றின் படித்துறையில் நல்லறம் அறக்கட்டளை சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தர்ப்பண மண்டப வளாகத்தில் நவக்கிரகங்களைக் குறிக்கும் வகையில் 9 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், நவகிரகங்களில் முதன்மையானவர் எனக் கருதப்படும் சூரியன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் பங்கேற்று மரியாதைகளை ஏற்றுக்கொண்டார்.