கோவை சங்கனூர் ஓடை பகுதியில் இடிந்து விழுந்த வீடுகளை,கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் நேரில் சென்று பார்வையிட்டார்.

இடிந்த வீடுகளில் வசித்து வந்த பொதுமக்களைச் சந்தித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய உதவிகளைச் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாகத் தெரிவித்தார்.

காந்திபுரம் பகுதி திமுக செயலாளர் ஆர்.எம்.சேதுராமன், வட்டக் கழகச் செயலாளர் எஸ்.போஸ், கமலாவதி போஸ், மாநகர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் டெம்போசிவா, தெற்கு தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் திரு நாராயணன்,கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.