வரும் செப்டம்பர் 4ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

இதையடுத்து கோவை டவுன் ஹால் பகுதியில் அமைந்துள்ள தமிழ் நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் விற்பனை நிலையமான பூம்புகாரில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை செவ்வாய் அன்று துவங்கியது.
krishnar 04 scaled
இந்த கண்காட்சியில்  கிருஷ்ணரின் திருவுருவம் கொண்ட பஞ்சலோகம்; பித்தளை, சந்தனமரம், கருப்பு மற்றும் வெள்ளை உலோக சிலைகள்; காகிதக்கூழ், களிமண் பொம்மைகள்மற்றும் எண்ணற்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
krishnar 02 scaled
25.08.2026 முதல் 04.09.2026 வரை, தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை, பூம்புகார் விற்பனை நிலையதில் இக்கண்காட்சி நடைபெறும்.
krishnar 03 scaled
இதில் விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
krishnar 05 scaled
இக்கண்காட்சி மூலம் ரூபாய் 12.00 இலட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
poompuhar 01 scaled