சென்னை சென்ட்ரல் – போத்தனூர் இடையே வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 4 முதல் 27ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி சிறப்பு ரயில் (06028) இயக்கப்படும். இந்த ரயில் காலை 7.40 மணிக்கு போத்தனூரில் புறப்பட்டு, மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரல் – போத்தனூர் சிறப்பு ரயில் (06027) மேற்கண்ட தேதிகளில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 3 மணியளவில் போத்தனூரை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வார இறுதி நாட்களில் சென்னை – கோவை இடையே பயணிக்கும் பொதுமக்களுக்கு இந்த சிறப்பு ரயில் சேவை கூடுதல் வசதியாக அமையும்.
