முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தான் சிறிது சிறிதாக சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை நிதியாக வழங்கிய கோவை பி.எஸ்.ஜி. பப்லிக் பள்ளி மாணவி பிரணவிகாவின் செயலுக்கு அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் மாவட்ட கலெக்டர் (ஆட்சியர்) பவன்குமார் பாராட்டை தெரிவித்துள்ளனர்.
கோவை காந்திமா நகரை சேர்ந்த பழனிச்சாமி – கிருத்திகா ஆகியோரின் மகள் பிரணவிகா. இவர் கோவை பி.எஸ்.ஜி. பப்லிக் பள்ளியில் 7ம் வகுப்பு படித்துவருகிறார். சிறுவயதில் இருந்து சமுதாயம், பொது மக்கள் நலன் சார்ந்த செயல்களில் ஈடுபாடுடன் இருக்கவேண்டும் என பெற்றோர்கள் இவருக்கு வழிகாட்டிவருகின்றனர்.
இதன் காரணமாக, இவர் தான் சிறுக சிறுக சேமித்த உண்டியல் பணம் – 1,322 ரூபாயை தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் வங்கி வரைவோலையாக வழங்கி உள்ளார்.

இதை அண்மையில் கோவை வந்த அமைச்சர் நிர்மல் குமாரிடம் தெரிவித்து வாழ்த்துக்களை பெற்றதுடன், இதற்கான வரைவோலையை சமீபத்தில் பிரணவிகா தனது தந்தை மற்றும் தங்கை உடன் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாரிடம் வழங்கினார்.
அதை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சிறுமியின் சமூக பொறுப்பை பாராட்டினார்.

