பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் 23வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. எம்.சி.இ.டி தலைவர் மாணிக்கம் விழாவை தொடங்கி வைத்தார்தாளாளர் ஸ்ரீ ஹரிஹரசுதன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் கோவிந்தசாமி விழாவில் வரவேற்புரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா (பி) லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் உப்பல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார். 909 பட்டம் பெற்றனர்.

அவர் பேசுகையில்: உறுதியான மதிப்புகள், நேர்மை மற்றும் நற்பண்புகளை நிலைநாட்ட வேண்டியது அவசியம். ஒரு பட்டம் என்பது இறுதி இலக்கு அல்ல; அது தொழில்முறை உலகிற்கான ஒரு நுழைவாயில். கடுமையான போட்டி நிறைந்த சூழலில், மாற்றத்துக்கு ஏற்ப மாறும் திறன், தொடர்ச்சியான கற்றல் மற்றும் புதிய சூழல்களை ஏற்றுக்கொள்வது மிகுந்த பலமாக இருக்கின்றது.

நிலையான வெற்றி என்பது தொழில்முறை சாதனைகளால் மட்டுமன்றி, நல்ல உடல் நலத்தையும் வலுவான தனிப்பட்ட உறவுகளையும் பேணுவதிலும்தான் அடங்கியுள்ளது என்று கூறினார்.