சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 79-வது சீனியர் தேசிய அக்வாட்டிக் சாம்பியன்ஷிப் – 2026 போட்டியில், டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர் பிரணித் சிறப்பாக விளையாடி சாதனை படைத்தார்.
5 கோல்கள் அடித்து தமிழ்நாடு அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். அவரது அபாரமான ஆட்டத்தைப் பாராட்டி, அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
தேசிய அளவில் கல்லூரிக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த மாணவரை, கல்லூரி முதல்வர் கோவிந்தசாமி, துணை முதல்வர் செந்தில்குமார், உடற்கல்வி இயக்குநர் அப்துல் ஹாலீக், உடற்கல்வித் துறை ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.
Previous
