ஈரோடு மற்றும் கரூர் இடையேயான தடத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக கோவை மற்றும் நாகர்கோயில் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் (வண்டி எண்.16322) மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை மாற்றம் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 3 வரை உள்ள சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமைகளில் நடைபெறும் என தெற்கு ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் படி வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூர், இருகுர், சூலூர், சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் தற்காலிகமாக நின்று செல்லாது.
HOjJodAbcAApfwb?format=jpg&name=small

மாறாக, போத்தனுர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய நிலையங்களில் ரயில் நின்று செல்லும்.