சுகுணா குழுமங்களின் நிறுவனர் ராமசாமி நாயுடு நினைவைப் போற்றும் வகையில், சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் நிறுவனர் தின விழா நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு மற்றும் செய்முறைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய சென்சார் ஆய்வகம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் திறக்கப்பட்டது.

6. c 2 scaled

நிகழ்வில் சுகுணா குழுமத் தலைவர் லட்சுமிநாராயணசாமி, அறங்காவலர் சுகுணா, சிறப்பு விருந்தினர் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் ரத்தினசபாபதி, கல்லூரி முதல்வர் கோவிந்தராஜலு, டீன் ரம்யா சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

6. a 7 scaled

இந்த ஆய்வகத்தின் மூலம் மாணவர்கள் சென்சார் தொழில்நுட்பம், ஆட்டோமேஷன், எம்பெடெட் சிஸ்டம்ஸ், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான செய்முறைப் பயிற்சிகளை கற்கலாம்.