கேரளா பகுதிகளில் இந்த வாரம் (22.6.26 முதல் 27.6.26 வரை) பருவமழை சூழல் தீவிரம் அடைய உள்ளது. அதன் காரணத்தால் வெப்பசலன மழை சூழல் குறைந்து பருவமழையின் தாக்கம் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன.
இதனால் கோவை மாநகரத்தின் பல இடங்களில் இந்த வாரம் லேசான மழையை எதிர்க்கலாம். வார நாட்களில் லேசான மழை சூழல் நிலவும் நிலையில் வார இறுதியில் அது மிதமானதாக மாறவும் வாய்ப்புள்ளது.
மாநகரின் வெளியே உள்ள பகுதிகள் (பொள்ளாச்சி, வால்பாறை, சிறுவாணி) நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பத்தை பொறுத்தவரை, கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைவான வெப்பமே நிலவும். மாநகரில் அதிகபட்சம் 32° செல்ஸியஸ் வெப்பம் நிலவும்.
நன்றி : சுஜய், வானிலை ஆய்வாளர் – கோவை.

