கோவை, அஜ்ஜனூர் பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. புதிதாகச் சேர்ந்த மழலையர் மாணவர்களுக்காக பள்ளியின் முதல்வர் வித்யாசங்கரால் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. குழந்தைகள், நெல்லின் மீது தங்கள் முதல் எழுத்துகளை எழுதினர்.

தொடர்ந்து, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்காகச் சிறப்புப் பிரார்த்தனை, பூஜையும் நடைபெற்றது. நிகழ்வில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
