உலகப்புகழ் பெற்ற ஆன்மீக குருவும், ஈஷா அறக்கட்டளை நிறுவனருமான சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் ‘Soak in the Ecstasy of Enlightenment’ தியான நிகழ்ச்சி புதுதில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 64 நாடுகளிலிருந்து 14,000 பேர் பங்கேற்றனர்.

இந்த தியான நிகழ்ச்சி, சத்குருவின் வழிகாட்டுதலில் ஆழமான தியான முறைகளை மேற்கொள்ளவும், மேம்பட்ட ஆன்மீக அனுபவங்களை பெறவும் வழிவகுத்தது. ஈஷா யோகப் பயிற்சியை நிறைவு செய்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஈஷா தன்னார்வலர்கள் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.

புதிய நகரங்களில் தியான நிகழ்ச்சி தொடரும்

இந்த பிரத்யேக தியான நிகழ்ச்சி இந்தியாவில் முதன்முறையாக டெல்லியில் நடைபெற்றது. இதற்கு முந்தைய நிகழ்ச்சி ஜனவரி 2024-இல் சிட்னியில் நடைபெற்றது. டெல்லிக்கு பிறகு, ஏப்ரல் 5-ஆம் தேதி பெங்களூரிலும், மே 24-ஆம் தேதி கனடாவின் டொராண்டோவிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

2 42

மிராக்கிள் ஆப் தி மைண்டு

முன்னதாக, சத்குரு வெளியிட்ட இலவச தியான செயலியான ‘மிராக்கிள் ஆப் தி மைண்டு’, அறிமுகமான 15 மணி நேரத்திலேயே 10 லட்சம் பதிவிறக்கங்களை கடந்துள்ளது. இது சாட் ஜிபிடி செயலியின் சாதனையை முந்தி, உலகம் முழுவதும் பிரபலமானது.

இந்த தியான செயலி 20 நாடுகளில், 5 மொழிகளில் கிடைக்கிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் என்பது இதன் தனிச்சிறப்பாகும். தியானத்துடன், சத்குருவின் ஞானம், பார்வை, மற்றும் ஆன்மீக வழிகாட்டுதல்களை வழங்கி வரும் இந்த செயலி, உலகளவில் ஆன்மீக தேடலில் உள்ளவர்களுக்கு முக்கிய சாதனையாக மாறியுள்ளது.