சென்னையில் நடைபெற்ற ஐடியதான் 2025 போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் விமானவியல் துறை மாணவர்கள்.

ஐஐடி மெட்ராஸ் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்பக் கழகம் இணைந்து நடத்திய ‘ஐடியதான் 2025’ தேசிய அளவிலான போட்டியில் கோவை இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் விமானவியல் துறை மாணவர்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்து வெற்றிபெற்றுள்ளனர்.

இந்த போட்டியில் விமானவியல் துறையைச் சேர்ந்த 18 மாணவர்கள் பங்கேற்று, எதிர்காலக் கடல்சார் தொழில்நுட்பத்திற்கு புதுமையான தீர்வுகளை முன்வைத்தனர். சூரிய சக்தியைப் பயன்படுத்தி கடல் மேற்பரப்பின் வெப்ப ஆற்றல் மூலம் மின்சாரம் உருவாக்குதல் மற்றும் ஜெல்லி மீன் அமைப்பைக் கொண்டு கடல் கழிவுகளை சேகரிக்கும் தானியங்கி இயந்திர வடிவமைப்பு போன்ற யுக்திகள் அவர்களுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தன.

2 18

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. மாணவர்களின் சாதனையை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா, முதல்வர் ஜெயா ஆகியோர் பாராட்டினர்

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி கல்வி, ஆராய்ச்சி, மற்றும் மாணவர் மேம்பாட்டில் தொடர்ந்து சிறப்புப் படைத்து வருவதைக் குறிப்பிட்ட அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், மாணவர்களின் யுக்திகள் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கும் கடல்சார் ஆராய்ச்சிக்கும் பயனளிக்கும் என்று தெரிவித்தார்.