ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவுகூரும் வகையில் விளக்கேற்றும் விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா அண்மையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில், ராயல் கேர் மருத்துவமனையின் தலைவரும், ராயல் கேர் நர்சிங் கல்லூரியின் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் மாதேஸ்வரன் தலைமை வகித்து, செவிலியர் தொழிலின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் பேசினார்.
இந்நிகழ்வில் குடும்ப நலத் துணை இயக்குநர் கௌரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நேர்மையாகவும் உறுதியாகவும் பணியாற்ற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதில் பி.எஸ்.சி. நர்சிங் மற்றும் டி.ஜி.என்.எம். முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்கள் சேவையை சமூக நலத்திற்கு அர்ப்பணிக்க நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்றனர்.