நேரு தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறை உறவுகள் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிப்பாடுகள் மையம், நேரு கார்ப்பரேட் பிளேஸ்மென்ட் & இன்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ் இணைந்து மனிதவள மாநாடு 2025 நிகழ்வை நடத்தினர்.
‘திறமையை தொழில்துறையின் தேவைகளுடன் பொருந்தச்செய்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாணவர்கள் தொழில்துறை நிபுணர்களுடன் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு பெற்றனர்.
நிகழ்வில் நேரு குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் தலைமை உரையாற்றினார். ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர். கவிதாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தொழில்துறையின் எதிர்கால தேவைகள் குறித்து பேசினார். கல்லூரி முதல்வர் சிவராஜா வரவேற்புரை வழங்கினார்.
16க்கும் மேற்பட்ட மனிதவள நிபுணர்கள் கலந்து கொண்டு, உணவு பதப்படுத்துதல், விமான மற்றும் கட்டிட பொறியியல், தகவல் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் திறன் மேம்பாட்டை பற்றி மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.