பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நொய்யல் படித்துறையில் நல்லறம் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள தர்ப்பண மண்டப வளாகத்தில் அமைந்திருக்கும் நவக்கிரக தூண்களின் கலசத்திற்கு புதன்கிழமை (5.2.2025) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், கௌமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.