கோவை நகைச்சுவை சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா, அவனாசி ரோடு சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

‘ஏனுங்க வாங்க சிரிக்கலாம்’ என்ற நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ், இயக்குனர் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

சத்யராஜ் கூறுகையில்: கோவையில் இருந்து சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி போய், சின்ன சின்ன வேடங்களில் நடித்த இயக்குனர் மணிவண்ணன் மூலம் வில்லனாக நடித்தேன். பின் கதாநாயகனாக ஆகி பாசில், பாரதிராஜா, பி.வாசு போன்ற முண்ணனி இயக்குனர்கள் படங்களில் நடித்தது, கவுண்டமணியுடன் இணைந்து பல நகைச்சுவை படங்களில் நடித்ததுப் பற்றி கலகலப்பாக கூறினார்.

தொடர்ந்து பல வெள்ளி விழா படங்களை கொடுத்த இயக்குநர் சுந்தர்ராஜன் பேசுகையில்: பல நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தாலும் கோவையை சார்ந்த சத்யராஜை வைத்து தான் இயக்கிய திருமதி பழனிச்சாமி படத்தின் போது ஏற்பட்ட பல சுவையான நிகழ்வுகளை மக்களிடையே கூறி சிரிக்க வைத்தார்.

1 6 1 scaled

நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் தலைவர் கே.ஆர். நாகராஜன், பிருந்தாவன் ஆடிட்டோரியம் உரிமையாளர் ராமலிங்கம், செல்வம் ஏஜென்சிஸ் நிர்வாக நந்தகுமார், சுப்ரீம் மொபைல்ஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், வேதநாயகம் மருத்துவமனை தலைவர் மருத்துவர் கந்தசாமி, கோவை நகைச்சுவை சங்கத்தின் செயலாளர் தனபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.