இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியின் ரெட் ரிப்பன் கிளப் சார்பில், எஸ்.எஸ்.எஸ். சாந்தி சமூக சேவை அமைப்புடன் இணைந்து ரத்த தான முகாம், கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

பெண் மாணவிகளுக்காக ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை கண்டறியும் ரத்தசோகை பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் மூலம் மாணவிகளின் ஹீமோகுளோபின் அளவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரத்தமாற்று மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஓம்பிரகாஷ் கலந்து கொண்டு, ரத்த தானத்தின் அவசியம், முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
