டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் தேசிய மாணவர் படை, நாட்டு நல பணி திட்டம் மற்றும் மிராக்கிள் இன்டகிரேட்டட் ஹெல்த் சென்டர் இணைந்து உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினராக மிராக்கிள் இன்டகிரேட்டட் ஹெல்த் சென்டர் மருத்துவ அலுவலர் டாக்டர் சுதர்சன் கலந்து கொண்டார். மருத்துவர்கள் இளங்கோவன், ஆஷா ஆகியோர் யோகா பயிற்சிகளை வழங்கினர். என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களில் மக்கள் தொடர்பு மேலாளர் நாகராஜன் வரவேற்பு உரையாற்றினார்.
