கோவை வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரியகுளத்தில் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, குளங்களின் பராமரிப்பு பணிகள் தொடர்பாக, இன்று ஆய்வு மேற்கொண்டார்.
குளங்களில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் செயல்பாட்டில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து, அதில் பழுதுகள் ஏதேனும் இருந்தால் அதனை சரி செய்ய வேண்டுமெனவும், குளங்களைச் சுற்றி நடைபாதைகளுக்காக அமைக்கப்பட்ட இடங்களில் உள்ள குப்பைகளை உரிய முறையில் அகற்றிடவும், தெருவிளக்குகள் சரியா எரிகிறதா என்பதைனை ஆய்வு செய்து, பழுதுகள் ஏதேனும் இருப்பின் விரைவாக சரிசெய்து தர வேண்டுமெனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஒவ்வொரு குளத்திலிருந்து எடுக்கப்படும் குப்பைகளை, முறையாக அகற்றுவது தொடர்பாகவும், தினந்தோறும் சேகாரமாகும் குப்பைகளை, சம்மந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மூலம் அகற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.
பசுமையாக பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், தேவையான இடங்களில் கூடுதலாக குடிநீர் வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், சிறிய அளவிலான பராமரிப்பு பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகளை ஒப்பந்ததார் மூலமாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
