மேட்டுப்பாளையம் சாலையில் முருகன் மில்/புதிய கங்கா மருத்துவமனை அருகே துவங்கி அரசு போக்குவரத்து கழகத்தின் கோவை மண்டல அலுவலகம் அருகே வரை 1.2 கி.மீ.க்கு  ரூ. 75 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி இறுதி நிலையில் உள்ளது.

இதை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சம்பத் குமார் நேரில் ஆய்வு செய்தார். அதிகாரிகளுடன் மேம்பாலத்தில் நேரடி ஆய்வு செய்த அமைச்சர் பின்னர் இப்பணிகளை விரைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
tvkmimnra scaledதற்போதைய தகவலின்படி மேம்பாலத்தின் பிரதான மேற்தளப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டது. இந்த வாரத்தில் மேம்பாலத்தை மக்கள்பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ளது.
tvkmnroad scaled
மேம்பாலம் மேலே வாகனங்கள் செல்ல துவங்கிய பின்னர் சர்வீஸ் சாலை பணிகள், தொலைத்தொடர்பு வயர்கள், பிற கேபிள்கள் மாற்றுவது போன்ற பணிகள் கீழே நடைபெறும்.