கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின் தடை ஏற்படும். அவ்வாறு நாளை (28.7.26) கோவை மாவட்டத்தில் உள்ள 3 துணை மின் நிலையங்களில் மின்தடை ஏற்படவுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்
ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையம் : தடாகம் ரோடு (ஒரு பகுதி), லாலி ரோடு, டி.பி.ரோடு (ஒரு பகுதி), கவுலிபிரவுண் ரோடு, டி.வி.சாமி ரோடு (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் ரோடு (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானியா வீதி, ராஜ வீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையர் வீதி, பி.எம்.சாமி காலனி மற்றும் சுண்டப்பாளையம் ரோடு (ஒரு பகுதி).
சின்ன தடாகம் துணை மின் நிலையம் : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை (ஒரு பகுதி), பெரியதடாகம் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம்.
நெகமம் துணை மின் நிலையம் : நெகமம், ஆவலப்பம்பட்டி, கொண்டேகவுண்டம்பாளையம், சின்னநெகமம், ராமச்சந்திராபுரம், காட்டம்பட்டி, அரசூர், மொகவனூர், வி.வேலூர், மூங்கில்தொழுவு.

