தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அக்டோபர் 6, 7 ஆகிய இரண்டு நாட்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும்.

முருங்கையில் முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நுாடுல்ஸ் மற்றும் காளானில் இருந்து உலர்ந்த காளான், காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய், காளான் கிரேவி கலவை, பிழிதல் தொழில் நுட்பம் ஆகிய உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770 பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு: 9488518268.