தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அக்டோபர் மாதத்திற்கான பயிற்சி வரும் 5 அன்று அளிக்கப்படும்.
பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் பயிற்சி நாளன்று பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமான ரூ.850 செலுத்த வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 590. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி நேரம் காலை 10 முதல் மாலை 5 மணி வரை.
