பெண்களின் கண்ணியத்தையும், பொதுமக்களின் மரியாதையையும் பாதுகாக்கும் வகையில், அவதூறாகவும் இழிவாகவும் பேசுபவர்களுக்கு எதிராக எந்தச் சூழலிலும் சமரசம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையைச் செய்யும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்த உறுதியான கருத்துக்கு, சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்தக் கருத்து, பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்துவதாக கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளுக்கு எதிராக முதலமைச்சர் எடுத்துள்ள இந்த உறுதியான நிலைப்பாடு, என்னைப் போன்ற பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மிகப்பெரிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.
பெண்களின் கண்ணியத்தையும், பொதுமக்களின் மரியாதையையும் காக்கும் வகையில், அவதூறாகவும் இழிவாகவும் பேசுபவர்களுக்கு எதிராக எந்தச் சூழலிலும் சமரசம் செய்ய முடியாது என்ற முதலமைச்சரின் சட்டப்பேரவை கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது.
பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளுக்கு எதிராக முதலமைச்சர் எடுத்துள்ள இந்த உறுதியான நிலைப்பாடு, என்னைப் போன்ற பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மிகப்பெரிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.
பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் உரிமைகளை பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருக்கும் என்பதை இந்த நிலைப்பாடு எடுத்துக்காட்டுகிறது.
பொதுமக்களையும், குறிப்பாக பெண்களை அவமதிக்கும் எந்தவொரு செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்! இந்த உறுதியான நிலைப்பாட்டிற்காக, முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
