தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 16, 17 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, நடைபெற உள்ளது.
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி நடைபெறும்.
நெல்லியில் இருந்து தயாரிக்கபப்டும் பழரச பானம் மற்றும் தயார் நிலை பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல் ஆகிய மதிப்பூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770 பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு: 9488518268
