கோவை மாநகரில் மக்களின் பொழுதுபோக்கிற்கு ஒரு சிறந்த இடமாக இருந்த பகுதி தான் மாநகராட்சியின் கட்டுபாட்டில் உள்ள சிங்காநல்லூர் போட் ஹவுஸ்.

Hyaccinnth scaledசிங்காநல்லூர் குளத்தில் படகு சவாரி செய்ய ஒரு காலத்தில் கூட்டம் குவிந்த இடம் இந்த படகு இல்லம். ஆனால் 2009ல் பராமரிப்பு குறைகள் உள்ளதால் (சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் குளத்தில் கலந்ததால்) என்பதால் சிங்காநல்லூர் குளம் மூடப்பட்டது, அத்துடன் சேர்த்து படகு இல்லமும் மூடப்பட்டது.

அதை தொடர்ந்து ரூ.30 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பின்னரும் இந்த வளாகம் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்து வருகிறது.

Hyacinth 2 scaledஇதில் தொடர்ந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் சேருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் இந்த நீர் நிலையில் படர்ந்து இருப்பது அதற்கு ஆதாரமாக அமைகிறது. ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் இருந்தால் அந்த இடத்தில் நீர் மாசு ஏற்பட்டுள்ளது அல்லது நீரின் தரம் மோசமாக உள்ளது என்பது பொருளாக அமையும்.

Hyaacinth scaledஇந்த நிலையில் படகு இல்லத்தை சுற்றியும் பெருமளவில் குப்பைகள் மிதக்கின்றன. மேலும் ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் பரவி உள்ளது.

சிங்காநல்லூர் குளம் 2017ல் கோவை மாநகராட்சியால் ‘நகர்ப்புற பல்லுயிர் தளம்’ என அறிவிக்கப்பட்டது. இங்கு 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இருக்கின்றன. எனவே நீரில் வாழக்கூடிய உயிரினங்களுக்கும் பல்வேறு பறவை இனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனில் இந்த குளக்கரையையும் குடத்தையும் சுத்திகரிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் கவனிக்கப்படாமல் இருந்த இந்த படகை இல்லம் வரக்கூடிய நாட்களிலாவது புத்துயிர் பெறுமா என இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.