சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நூலகத் துறை சார்பில் வாசிப்பின் முக்கியத்துவம் மற்றும் நூலகத்தின் பயனுள்ள பயன்பாடு குறித்த சிறப்பு வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜ்குமார் மற்றும் இயக்குநர் சேகர் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.

கல்லூரி நூலகர் மெல்வின் ஜெபராஜ் சிறப்புரையில் பேசுகையில்:  கல்வி வெற்றிக்கும், தனிமனித முன்னேற்றத்திற்கும் நூலகம் அடித்தளமாக விளங்குகிறது. தினமும் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் கட்டாயம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.  தொடர்ந்து வாசிப்பது அறிவை விரிவுபடுத்துவதோடு, சொற்களஞ்சியம், விமர்சன சிந்தனை, படைப்பாற்றல், தகவல் பரிமாற்றத் திறன் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை மேம்படுத்தும்.

மாணவர்கள் தங்களது அன்றாட கல்வி நடவடிக்கைகளில் நூலகத்தை தவறாமல் பயன்படுத்தி, தொடர்ந்து வாசிப்பதன் மூலம் கல்விச் சிறப்பையும், வாழ்நாள் முழுவதும் கற்றலையும் அடைய வேண்டும் என்று ஊக்குவித்தார்.