கோவையில் ரூ.73.05 கோடி மதிப்பீட்டில் சுமார் 4.30 கி.மீட்டர் நீளத்திற்கு நொய்யல் ஆற்றின் கரையை  பலப்படுத்த கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றாலத்தில் துவங்கும் நொய்யல் ஆறு திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்கள் வழியாக 158.35 கி.மீ நீளத்திற்கு சென்று நொய்யல் என்னும் கிராமத்தில் காவேரி ஆற்றுடன் கலக்கிறது.

நொய்யல் ஆறு கோவை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 67.71 கி.மீ நீளத்திற்கும், கோவை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பேரூர் செட்டிபாளையம் முதல் மேற்கிலிருந்து கிழக்காக பட்டணம் இட்டேரி சாலை வரை 18.56 கி.மீ நீளத்திற்கு அமைந்துள்ளது.

இவற்றில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட ஆத்துப்பாலம் சந்திப்பு முதல் நஞ்சுண்டாபுரம் சந்திப்பு வரை 4.30 கி.மீ நீளத்திற்கு ஆற்றின் இரு கரைகளிலும் ரூ.73.05 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு  பணிகள்  மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், நொய்யல் ஆற்றின் நுழைவுவாயில் பகுதியில் வளைவு, இழுவை அமைப்புகள், கரையோரத்தில் ஜியோ-செல் அமைப்பு, படிக்கட்டு வடிவ காபியன் சுவர், கரையோரம் 2,380 சதுர மீட்டர் பரப்பளவு மற்றும் பாலத்தில் தாங்கு சுவரில் காபியன் கல் பதித்தல் பணி,

பல்வேறு வகையான மரங்கள் மற்றும் 50 எண்ணிக்கையிலான கற்களாலான அமர்விடங்கள், தோட்டம், தடுப்பு சுவர், கருங்கல் சுவர், மிதிவண்டி பாதை மற்றும் நடைபாதை பாதை,  மிதிவண்டி நிலையங்கள்,  4  இடங்களில் குப்பைத் தடுப்பு மிதவை அமைப்புகள்,

பார்வை மேடை, ஆற்றங்கரையில் சூரிய ஆற்றல் விளக்குகள், சூரிய ஆற்றல் மர விளக்குகள், பாதுகாப்புத் தூண்கள், ஓய்வு பகுதி, ஆற்றங்கரையில் வேலி அமைத்தல், சுழலும் கதவுகள், இரும்பு பாலம், சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நொய்யல் ஆற்றின் 18.56 கி.மீ தூரத்தை ட்ரோன் மூலம் ஆய்வு செய்து எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆசாத் நகர், போத்தனூர் சாலை (இட்டேரி), வெள்ளலூர் சாலை மற்றும் ராஜீவ் காந்தி நகர் ஆகிய இடங்களில் பூங்காக்களும், திட்ட விளக்க தகவல் பலகைகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்புதலுக்காக சென்னை, நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு சமர்ப்பிக்