கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.

இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின்தடை ஏற்படும். அவ்வாறு நாளை (6.10.26) கோவையில் உள்ள 2 துணை மின் நிலையத்தில் மின்தடை ஏற்படவுள்ளது.

ஆனால் கீழ்காணும் இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இம்முறை மின்தடை ஏற்படும்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

கள்ளிமடை துணை மின் நிலையம் : காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம்.

மசகவுண்டன்செட்டிபாளையம் துணை மின் நிலையம் : மசகவுண்டன்செட்டிபாளையம், பொன்னேகவுண்டர்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டிபுதூர், மண்ணிக்கம்பாளையம்,கள்ளிபாளையம், தொட்டியனூர் (ஒரு சில பகுதிகள்),ஓரைக்கால்பாளையம்.