அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது.

விழாவுக்கு, பல்கலைக்கழக வேந்தர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்து, அகிம்சை வழியில் இந்தியாவிற்கு சுதந்திரம் மற்றும் காந்தியடிகளின் அறப்பாதைக் குறித்தும் எடுத்துரைத்தார்.

11b scaled

காந்தி நிகேதன் ஆசிரமத்தின் தலைவர் ரகுபதி சிறப்பு விருந்தனராகக் கலந்து கொண்டு,   காந்தியடிகளின் வாழ்க்கை அனுபவத்தின் வழி சாதிக் கொடுமை, நிறவெறிக் கொடுமை போன்றவற்றை எடுத்துரைத்தார். எளிமையும், வறுமையுமே வாழ்வின் வளங்கள்; அவை முன்னேற்றத்திற்கு தடையில்லை என்றார்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், அறநெறிகளை உறுதியாகப் பற்றிக்கொள்ளவும், சவால்களை எதிர்கொள்ளும்போது தளராத மன உறுதியுடன் இருக்கவும், காந்தியக் கொள்கைகளை அன்றாடச் செயல்பாடுகளில் நடைமுறைப்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.