கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின்தடை ஏற்படும். அவ்வாறு நாளை கோவை மாவட்டத்தில் உள்ள 3 துணை மின் நிலையங்களில் மின்தடை ஏற்படவுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
காளப்பட்டி துணை மின் நிலையம்: காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன் மாநகா், நேரு நகா், சிட்ரா, அசோக் நகா், வழியம்பாளையம், பாலாஜி நகா், கே.ஆா்.பாளையம், ஜீவா நகா், விளாங்குறிச்சி, தண்ணீா்பந்தல், லஷ்மி நகா், முருகன் நகா், பீளமேடு இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷாா்ப் நகா், மகேஷ்வரி நகா், குமுதம் நகா் மற்றும் செங்காளியப்பன் நகா்.
கீரணத்தம், சகாரா, அலையன்ஸ்மால் துணை மின் நிலையம்: கீரணத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி ஒருபகுதி, விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி ஒருபகுதி, சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, விநாயகபுரம், எல்.ஜி.பி.நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகர், சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு மற்றும் விளாங்குறிச்சி ரோடு.
க.க.சாவடி துணை மின் நிலையம்: முருகன்பதி, வீரப்பனூர், சாவடிபுதூர், ஏ.ஜி.பதி, நவக்கரை, குமிட்டீபதி, அய்யன்பதி, திருமலையாம்பாளையம், பிச்சனூர், ரங்காசமுத்திரம்

