இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை, பை தி ஸ்டார்ட் அப்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிறுவனத்தின் நிறுவனர் ஷமீர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் மாணவர்களுக்கு தொழில்துறைப் பயிற்சி, இன்டர்ன்ஷிப், ஸ்டார்ட்அப் இன்கியுபேஷன், ஆலோசனைப் பணிகள், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள், திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் உருவாக்கப்படும். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் நடராஜன், துறைத் தலைவர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.