தீபாவளியை முன்னிட்டு இம்முறை குழந்தைகளை கவரும் படி பல்வேறு பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

குழந்தைகளுக்கு பிடித்தமான 50க்கும் மேற்பட்ட வகை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. அதிலும் வழக்கமான கைத்துப்பாக்கி வகையில் பட்டாசு நிறுவனங்கள் புதுமையை அறிமுகப்படுத்தியுள்ளன .
colorpeeac scaled
துப்பாக்கிக்குள் சிறு வெடியை போட்டு, பட்டனை அழுத்தினால் பறந்து சென்று வெடிக்கும் புல்லட் வகை பட்டாசுகளை சிறுவர்கள் அதிகம் வாங்கிச்செல்கின்றனர்.
riskp scaled
பற்ற வைத்தால் முட்டை போடும் ‘வாத்து பட்டாசு’, ஒரே நேரத்தில் சங்கு சக்கரம் போல சுற்றி முடித்து புஷ்பாவணமாக பரவும் வகை பட்டாசுகள் போன்றவை குழந்தைகளை ஈர்க்க துவங்கி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

“வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் தான் எங்களுக்கு நல்ல வியாபாரம் இருக்கும். வானிலையை பொறுத்து பட்டாசு வாங்குவது பற்றி வாடிக்கையாளர்கள் முடிவு செய்வார்கள். பெருமளவு மழை பெய்யவில்லை என்றாலே எங்களுக்கு நல்ல வியாபாரம் இருக்கும்,” என தெரிவித்தனர்.

பட்டாசு வாங்கும் முன் உங்க குழந்தைகளுக்கு இதை சொல்லிக்கொடுங்க!

இந்திய அரசு உதவியுடன் இயங்கும் நீரி ஆய்வகம் (அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி ஆய்வகம்) 2019 முதல் பசுமை பட்டாசுகளுக்கான ‘பார்முலா’ வை தயாரித்து பட்டாசு நிறுவனங்களுக்கு வழங்கிவருகிறது.
neeri mark scaled

இந்த வகை பட்டாசுகளில் இதற்கு முன்னர் வெளிவந்த பாரம்பரிய வகை பட்டாசுகளை விட 30% – 50% குறைவான மாசு வெளியேறும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் வாங்கும் பாட்டாசுகளில் நீரி-குறியீடு உள்ளதா எனவும், இந்த ஆய்வகத்தில் இந்த பிராண்ட் பட்டாசுகள் பதிவாகியுள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ளவும் வேண்டும்.

ஒரு மாநிலத்தில் விற்கப்படும் பட்டாசுகள் பசுமை பட்டாசுகள் தானா என்பதை உறுதி செய்துகொள்வது அந்த மாநிலத்தின் தரக்கட்டுப்பாடு ஆணையங்களின் பொறுப்பு என்றாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கி தருவது பசுமை பட்டாசுகள் தானா என்பதை தெரிந்து வாங்கி தரவேண்டும்.

எப்படி கண்டுபிடிப்பது?

பசுமை பட்டாசுகளில் ‘நீரி’ ஆய்வகத்தில் பதிவு செய்யப்பட்ட குறியீடு இருக்கும். மேலும் பதிவு செய்ததற்கான கியூ.ஆர். குறியீடும் இருக்கும்.
bullets scaled
இதை வைத்து அவற்றை கண்டுபிடிக்கலாம். இதற்கு மேல், அதிகாரபூர்வமாக ‘நீரி’ இணையத்தளத்தில் https://www.neeri.res.in/file_homes/Registration_List_of_Firecracker.17.09.26.pdf
பதிவான பட்டாசு பிராண்டுகளை கண்டறிய முடியும்.

ஏன் இதை செய்யவேண்டும்?

தீபாவளி அன்று வெளிவரும் காற்று மாசு என்பது தேசிய அளவில் நடைபெறும் ஒரு நிகழ்வு. இது சுற்றுசூழல், பொதுமக்கள், வானிலை மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

குழந்தைகளுக்கு எதை வாங்கி தந்தாலும் பார்த்து பார்த்து வாங்கி தரும் பெற்றோர்கள், தாங்கள் வாங்கித்தரும் பட்டாசு எப்படிப்பட்டது என்பதையும் கவனித்து வாங்கி கொடுப்பது குழந்தைகள் அவர்களிடம் கற்றுக்கொள்ளும் ஒரு நல்ல பாடமாகவும், இயற்கையின் பசுமை தன்மைக்கு ஏற்படும் தீங்கின் தாக்கத்தை குறைக்க கற்றுக்கொடுக்கும் நல்வழிகாட்டுதலாகவும் மாறும்.