பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி சார்பில், ‘புதிர் 2026’ என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் ஜெயதீபா போட்டியை தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக பி.எஸ்.ஜி புற்றுநோய் மருத்துவ நிறுவனம், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜ்குமார் கோட்டயசாமி சீனிவாசகம் கலந்து கொண்டு, செவிலியர்களின் தொடர்ச்சியான கற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார்.

இப்போட்டியில் நான்கு குழுக்களிலிருந்து மொத்தம் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  போட்டியில் சூழ்நிலைச் சுற்று, எமோஜி சமன்பாடு, படங்களை இணைக்கும் சுற்று, சொல் புதிர், விரைவு வினா-விடை மற்றும் பொது அறிவுச் சுற்று ஆகியவை இடம்பெற்றன.

கொங்குநாடு செவிலியர் கல்லூரி முதல்வர் ஜோஸ்பின் ஜாக்குலின் மேரி, ஜி.கே.என்.எம் செவிலியர் பயிற்சி நிறுவனம் முதல்வர் சாந்தி, பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி துணை முதல்வர் மீரா ஆகியோர் நடுவர் குழுவினராகச் செயல்பட்டனர்.