2026 தேர்தலுக்கு பின் முதல்முறை கோவை வருகிறார் ஸ்டாலின்; எதற்காக? எங்கெல்லாம் செல்கிறார்? -இதோ தகவல்
கோவைக்கு பெரியார் பெயரில் பிரம்மாண்ட நூலகம் & அறிவுசார் மையம் அமைக்க அடிக்கல் நாட்டி, திட்டத்தை செயல்படுத்தியது தமிழ்நாடு அரசு.
கடந்த திமுக ஆட்சியில் தமிழக அரசு இந்த திட்டத்தை அறிவித்து, அதை செயல்படுத்துவது. த.வெ.க. தலைமையிலான ஆட்சி அமைந்ததும், தமிழக அரசு சார்பில் இதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திட்டம் கோவையில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது இந்த திட்டத்தை அரசு செயல்படுத்தியது. இப்படி ஒரு திட்டத்தை அப்போதைய அரசு கொண்டுவந்ததற்கு, நன்றி தெரிவிக்க நாளை 4.11.26 திராவிடர் கழகம் சார்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
நிகழ்வில் பங்கேற்க நாளை காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து நீலாம்பூர் செல்லும் ஸ்டாலின், அங்கு ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதையடுத்து வ.உ.சி. மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

