கஸ்தூரி சீனிவாசன் கலை மையத்தில் THIRD EYE எனும் தலைப்பில் ஓவியக் கண்காட்சி இன்று தொடங்கியது. மே 18ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறும்.

ஓவியக் கண்காட்சிகளை தொடர்ந்து நடத்தி வரும் கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம், 2003ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 224 ஓவியக் கண்காட்சிகளை பல தலைப்புகளில் நடத்தியுள்ளது.

2025ம் ஆண்டுக்கான ஓவியக் கண்காட்சிகள் ரிதமிக் பேலட் தொடர் 2024 – 2025 என்ற தலைப்பில் நடத்த முடிவு செய்யப்பட்டு, இத்தொடரின் 14வது மற்றும் 225வது ஓவியக் கண்காட்சி இன்று தொடங்கியது.

இதில் கோவையைச் சேர்ந்த ஓவியர் சரவணன், தனது படைப்புகளை ஓவியக் கண்காட்சியில் பார்வைக்கு வைத்துள்ளார். இக்கண்காட்சியை பி.எஸ்.ஜி பப்ளிக் பள்ளியின் முதல்வர் கிரீஷ் ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்தார்.

10 மணிமுதல் மாலை 6.30 மணிவரை கண்காட்சியை காணலாம். மேலும் ஓவியங்கள்  விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.