12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் வெளியாகியது. இதில் கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளி 12ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பள்ளி அளவில் மாணவன் லிபீஷ் 494 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மையூரி, ரித்திக் பட்டேல் 488 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், சுபிக் ஷா 486 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

274 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 480 மதிப்பெண்களுக்கு மேல் 6 பேரும், 470 மதிப்பெண்களுக்கு மேல் 19 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 66 பேரும், 400.,க்கு மேல் 178 பேர் பெற்று 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.